Sunday, January 11, 2026

Coffee Rails - 1-Sep-2025

 Once we ruled the pantry floor,

Mocking meetings, wanting more-

Laughter brewed in mugs and eyes,

Sneaky hugs and alibis.


You’d ask deep stuff out of the blue,

I’d answer like a talk-show crew.

We knew too much, yet played it cool,

Like rebels skipping grown-up school.


One day you ghosted, said “just stress”,

Then coffee breaks turned into guess-

Would she show up or vanish thin,

Like budget hikes or Friday’s gym?


I stayed a fool, kept walking in,

Past the desk where we had grinned.

Even WhatsApp group looks sad,

It misses all the memes we had.


Now here’s a line I thought you’d see - 

An old-school ping, low calorie:

No drama, guilt or deep confessions,

Just “hey, remember our sessions?”


If this poem makes you grin,

Maybe next time, check back in - 

Not for drinks or long lost tales,

Just one smile near coffee rails. ☕

When The Soul Grows Tired - 10-Nov-2025

 Sometimes the soul grows tired

not from walking,

but from standing still - 

from waiting at doors

that never open,

from holding out light

for those who never arrive.


Patience, once a virtue,

turns to ache.

Hope frays

in the quiet corners of the heart.


And one day,

without anger,

without ceremony,

the soul simply sighs,

closes the door,

and starts walking again - 

not away,

but toward its own peace.

Forgotten Lanes - 21 Sep 2025

 The corridor stretches, long and still,

Yet each step echoes with memory’s will.

We searched for rooms, a meeting in name,

But found in disguise our own little flame.



Now silence lingers where laughter once lay,

An empty passage, where shadows stay.

The walls remember, though time has gone,

A quiet reminder we once belonged.

Whispers In The Sand - 7 Sep 2025

 There were days we planned,

and days that drifted unplanned.

There were days we shared,

days we spoke for hours.


There were days I asked of you,

days you asked of me.

There were days I waited,

days I searched your face.


Now days turn into longings,

and nights into hollow echoes.

Every walk, every space,

still stamped with those golden memories.


The mind whispers: all is phantasm,

yet the heart still wanders,

still searching,

“where you are…”

Reunion 2025

 அன்று—

பள்ளி வாசல் நிழலில்

கால் நடுங்க, கை பிடித்து நின்றோம்;

உலகம் அறியாத

நட்பு அறிந்த பருவம்.


விதை வேறாயினும்,

விதைத்த காலம் மாறினும்—

வேரூன்றிக மணந்தது

ஒரே மண்ணில்தான்.


கோகோ ஓடிய கால் தடங்கள்,

லெக் டச் தொட்ட காலணிகள் ,

வுட் கட்டர் வியர்வையில் குரங்குதனத்தோடு

விளையாடி வளர்ந்த நாட்கள்...

ஃப்ரீ பீரியட்களில்

Joining Dots கனவுகள்,

Trump card'gal solli thandha veeram,

“Hollywood” என்ற சொல்லில்

உலகம் விரிந்த தருணம்.


“Attention… Stand at Ease”—

ஒரே கட்டளையில்

குழந்தை மனம்

ஒழுக்கம் கற்றது...


மணிக்கூடு ஓசை

காலம் அளந்தது;

ஆசான் பார்வை

வாழ்வு காட்டியது.


இன்று—

பெயர்க்கு அருகில் பல

பதவிகள் சூடினோம்... இருந்தும்

ஒரு பழைய பெயர் ஒலித்தால் மட்டும், மனதில் ரீங்காரமாய்

சிறு புன்னகை...


நாம் இன்று எங்கே நின்றாலும்,

நம்மை நிமிர்

த்தி நிறுத்திய

முதல் அடையாளம்... SBOA

Sunday, April 17, 2022

திருவிழாக்காக... (18/4/12)

 திருவிழாக்காக...

~~~~~~~~~~~~~~

இரவு நித்திரையின் போதும்,

நிரம்பிய வயிரின் ஓய்வுபோதும்,

என்னை நான் நினைக்கும்போதும் 

என் மனதின் அடி ஆழத்திலிருந்து -ஏதோ 

ஒன்று கிடைத்தும் கிடைக்காமல்,

தொலைந்தும் தொலையாமல் இருப்பதுபோல்  

ஓர் உணர்வு!


சந்தித்த நாட்களும் சரி 

சண்டையிட்ட நாட்களும் சரி...

காத்திருந்த நாட்களும் சரி 

பேசிய நாட்களும் சரி...

ஒவ்வொரு கணமும் திருவிழா நாட்களாய்

இன்று என் மனதில்!


வெறும் நட்பு என்றும் சொல்ல இயலாமல் 

அன்பே என்று அழைக்கவும் இயலாமல் 

மீண்டும் உன் உறவுக்கு காத்திருக்கிறேன் 

அந்த திருவிழாக்காக!!

                                                                 -D.V.B-

Thursday, April 16, 2020

நயாகரா நீர்வீழ்ச்சி - ஒரு சிறிய கண்ணோட்டம் (Niagra)

வருடம்: 2009

அமர்ந்து கொண்டிருக்கிறேன் நான்... ஒரு விமானத்தில் -
நயாகராவில் இருந்து சிகாகோ விற்கு புறப்படும் விமானத்தில்.... நேரம் இரவு ௭:௩0 (7:30) மணி .

அருகில் உள்ள மக்கள் பலரும் தங்களது இருக்கையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்து புரட்டிக்கொண்டு இருக்கின்றனர். சிலர், "இன்றும் என் அருகில் கிழவிதான் அமர வேண்டுமா :-( "  என்று மனதுக்குள் புலம்பியபடி சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான், முதன் முதலாய் ஓர் நோட் புக்கில் பென்சிலில் கிருக்கியபடி எழுதி கொண்டிருக்கிறேன். விமான ஓட்டுனர் பாதுகாப்பு அறிவுரைகளை கூறி கொண்டிருக்கிறார். அதை ஏனோ தானோ என காதில் கேட்டபடி மனதில் தோன்றியவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்...

அட, ஏதோ உந்துவதுபோல் தோன்றுகிறதே? ம்ம்ம்... விமானம் நகர ஆரம்பித்துவிட்டது. என் வலதுபுறம் உள்ள ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தேன் ; விமான இறகுகள் தென்பட்டன. ஓ!!  இன்றும் இந்த விமான இறகுகளின் அசைவுகளை விமான பயணத்தின்போது காண முடியும் என எண்ணினேன்... இந்த விமானத்தில் இருக்கைகள் இருபுறம் உள்ளன. ஒவ்வொரு புறத்திலும் மூன்று இருக்கைகள். இவ்வாறு இருபத்தி ஒரு வரிசைகள் உள்ளன. நான் வலது புறத்தில் உள்ள பதினெட்டாம் வரிசையில் அமர்ந்துள்ள ஒரு இந்திய வாலிபனுக்கு இடையேயும் ஒரு ஐம்பது வயது அமெரிக்க மூதாட்டிக்கு இடையேயும் அமர்ந்துகொண்டிருகிறேன்.

விமானம் பறக்க ஆரம்பித்துவிட்டது... அது பூமியின் ஈரப்பு சக்தியை எதிர்த்துக்கொண்டு காற்றை கிழித்துக்கொண்டு மேலேறுகிறது. ஏதோ ஒரு தடுப்புச்சக்தியை எதிர்த்து தள்ளிக்கொண்டு போவதைபோல் உணர்வோம். காற்றழுத்தம் நம் காதுகளை அடைத்துக்கொள்ளும். சற்றே திரும்பி பாத்தேன்... எனது இடது பக்கம் அமர்ந்துள்ள இந்திய இளைஞன் மற்றும் எனது வலப்பக்கம் அமர்ந்துள்ள அமெரிக்க மூதாட்டி இருவரும் தம் கண்களின் சோம்பல் சாய்கின்றனர். அப்படியே எனது வலப்பக்கம் உள்ள சன்னலை எட்டிப்பார்த்தேன். அற்புதமான காட்சி !! அமெரிக்க மற்றும் அதன் உறவு நாடான கனடாவை கிழிக்கின்ற வெள்ளதைபோல் ஓடுகின்ற நயாகரா நதியை நாம் காணலாம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலங்கள் நமது நெஞ்செலும்புகளை போல் காணப்ப்படும்.  இதை பார்த்துக்கொண்டு இருக்கையில், என் உதட்டோரம் சிறு சிரிப்பு பூப்பதை நான் உணர்ந்தேன். ஆம், நான் இப்பொழுது தொலைவில் இருந்து பார்க்கும் காட்சியைத்தான் நேற்று அருகில் சென்று பார்த்தேன்.

நியாகரா வீழ்ச்சியை பலர் பாராட்டி கேட்டிருக்கிறேன் ; இருந்தும், நேற்று அந்த வீழ்ச்சியை நேரில் சென்று கண்டபொழுதுதான் தெரிந்தது அதன் பிரம்மிப்பு !! சுமார் இருநூற்று ஐம்பது அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த ராட்சச வீழ்ச்சி. இதில் உள்ள ஒவ்வொரு துளியும் சுமார் இருபத்திரண்டு மைல்/கிமீ வேகத்தில் விழுகிறதாம். அதை, அந்த வீழ்ச்சியின் முரசு சத்ததின்னின்றும், அது கிளப்புகின்ற புகையிலிருந்தும் நாம் அறியலாம். இதன் அகலமும், நெடுமையும் ஏதோ ஒரு பகுதி வானத்தை தனக்குள் ஏந்தியதுபோல் காட்சி அளிக்கும். முதலில் இரண்டு அடி உயரத்தில் பிறக்கும் இந்த நதிநீர் தனது மிகுதியால் பாறைகள் மீது மோதிக்கொண்டு, சலசல என்ற ஆரவாரத்துடன் இருநூற்று ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. இந்த வீழ்ச்சி, தான் விழும் வேகத்தில் தன் துளிகளை சுமார் ஐந்நூறு அடி தொலைவிற்கு சிதறடிக்கும்.

இங்கு செல்லும் அனைவரும் பார்க்கவேண்டியது இரண்டு- "மைடு ஒப் த மிஸ்ட்" -  மற்றும் "கவே ஒப் த விண்ட்ஸ்".  மிட் ஒப் த மிஸ்ட் என அழைக்கப்படுவதில் மக்களை அருவிக்கு அருகே கப்பலில் அழைத்துச்செல்வார்கள். நாம் கப்பலின் கூரையிட்ட கீழ்த்தலத்திலோ அல்லது திறந்துகிடக்கும் மேல் தளத்திலோ சென்று நின்று கொள்ளலாம். இந்த இயற்கை அழகின் காட்சியில் நனைத்துகொண்டது போதாது, அதன் நீர் தெரிப்பிலும் தம்மை நனைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கப்பலின் மேல்தலத்திற்கே செல்வார்கள். நானும் அப்படித்தான்...

கப்பலின் என்ஜின் தனது பயணத்தை டுபுடுபு என ஆரம்பித்ததில் இருந்து, இந்த இயற்க்கை காட்சியின் பிரம்மாண்ட அழகில் தொலைந்துபோனேன் நான். என்னை போலவே அந்த கப்பலில் பயணித்த அனைவரும், தங்கள் முகத்தில் சிரிப்பு பூக்க தன்னை மறந்து நெஞ்சம் மகிழ்ந்தனர்.

அமெரிக்க மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவே இந்த நயகரா நதி அமைந்துள்ளதால், இரு நாடுகளினின்றும் சுற்றுல கப்பல்கள் மக்களை ஏந்திய வண்ணம் புறப்படும். இதில் பயணிக்கும் அனைவருக்கும் கப்பலில் ஒரு பிளாஸ்டிக் ஆடையை கொடுப்பார்கள். இது தெறிக்கின்ற நீரில் நனையாமல் இருப்பதற்காக அணிந்துக்கொள்ளலாம். இந்த கப்பலில் செல்லும் போது மொத்தம் நான்கு அருவிகளை காணலாம். அமெரிக்க நிலத்திலிருந்து உருவாகும் இரண்டு அருவிகள், கனடா நிலத்திலிருந்து விழும் ஒரு அருவி மற்றும், இரு நாடுகளையும் தன்னுள் இழுத்துக்கொண்டு சரிவதுபோல் விழுங்கின்ற ராட்சச அருவி.

நான் சென்றது அமெரிக்க கப்பல் சவாரியில்... என்னோடு பணிபுரியும் அம்பிலி, அமித், அனூப் மற்றும் அவரது மனைவியும் என்னுடன் பயணித்தனர். அந்த கப்பலில் இருந்த அனைவரும் தனது கண்களில் சந்தோசத்தோடும், மனதில் வியப்பு கலந்த பயத்தோடும் போட்டிபோட்டுக்கொண்டு புகைப்படங்களை எடுத்துகொண்டனர்.
நீர் வீழ்ச்சியால் எகிரித்தெரிக்கின்ற நீர்துளி அலைகளை சிறிதும் பொறுப்படுத்தாமல், ஏதோ வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று கிடைத்ததுபோல், அனைவரும் அந்த ராட்சச நீர்வீழ்ச்சியின் முன் நிற்பதுபோல் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் நாங்கள் ஐவரும் அடங்குவோம்.

நாங்கள் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சொன்ன ஒரு செய்தி - இந்த அருவி தன்னை தாங்கும் பாறையை ஒரு வருடத்திற்கு சுமார் நான்கு அடி தூரத்திற்கு அரிக்கிரதாம். இந்த அரிப்பை கட்டுப்படுத்த அமெரிக்க நாடு இதன் ஒரு பகுதி தண்ணீரை வேறு திசைக்கு திருப்பி மின்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இதனால், வருடத்திற்கு நான்கு அடி அரிப்பில் இருந்து ஒரு அடி அரிப்பிற்கு குறைத்துள்ளனர். இருப்பினும் இன்னும் ஐம்பதாயிரம் ஆண்டுகளில் இந்த நீர் வீழ்ச்சி தன்னை சுமக்கின்ற பாரைநிலத்தை அரித்து அரித்து பின்னேறி அதை தரைமட்டம் ஆக்கிவிடும் என்று அந்நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதை, அங்கு நேரில் சென்று நீர்வீழ்ச்சியின் ஓசையில் தனது உடல் அதிர்வை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த உணர்வை உணர்ந்து வியந்தபடியே பிரம்மித்த கண்களோடு நாங்கள் கரைக்கு திரும்பினோம்.

பின்னர் எங்களை அங்கு அழைத்துச்சென்ற சுற்றுலா  ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா பேருந்திற்கு சென்றார். பின்னர் அவர் எங்களக்கு அங்குள்ள ஒவ்வொரு இடத்தையும் விலக்கியபடியே பேருந்தில் வட்டமிட்டார்.

(தொடர்ச்சி துலைந்தது... 😊)

படித்ததற்கு நன்றி....

Monday, April 13, 2020

வி-(தை)-வை == Wi-(n)-dow

வி-(தை)-வை
******************
ஒவ்வொரு நாளும் போராட்டம்
என் மனதுள் எழும் நீரோட்டம்...
விடை அறிந்தும் தெளிவின்றி
நான் நடத்தும் கூத்தாட்டம்!
முன்னேறி செல்ல ஒரு மனம்,
எனை புதைத்து கொல்ல மறு மனம்;
மாற்றார் இன்புற நான் இடும்
பகட்டு வேஷம்,
கொல்லாமல் புதைக்கப்படும் என்னுள் உள்ள நேசம்...
கொய்தப்பட்ட கிளையாய் நான் வேரின்றி  கிடக்க - இனி நான்
புது மரமோ, செய் மரமோ
அதை நேரமே, நீ கூறு...!!


Synonymous Translation of the above poem.

Wi-(n)-dow
*************
[[ A silent cry of a widow, deep within...]]

I never felt so broke,
My woes are making me choke.
Know not what I spoke
Of the feelings that I stroke !
Progress is what I crave
But this void digs my grave !
Plastered smile to those I wave
Deep within am numb and naive!!
Stalks were twitched,
My roots were scrapped.
Sprout again or be trapped -
Will Time get this etched ?


Tuesday, March 17, 2015

மனதின் ஈரம்

அதே இரவுதான்
இதே நேரம்தான்
அவள் வடித்த கண்ணீரை
நான் நினைத்தது...

அதுவரை ஈர மண்ணில் முளைத்த
பனையாய் இருந்த என் மனம்
முதன் முதலாய் தளர ஆரம்பித்தது...

நாட்கள் செல்ல செல்ல
ஒவ்வொரு நிமிடமும்
கேள்விகள் உதிக்க ஆரம்பித்தன...

உறுதியாய் இருந்த என் மனதில்
தேனிக்கள் கூடு கட்ட தொடிங்கியது;
அவற்றின் வலியில் துடிப்பதா
இல்லை தேனை சுவைப்பதா
தெரியவில்லை....

கண்ணீர் கரையான்களால் அரிக்கப்பட்டேன் !
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
ஏன் இந்த தயக்கம்,
ஏன் இந்த கலக்கம்;
விடைகள் புரியவில்லை...

புத்தியில் உண்மை புரிந்தாலும்
நினைவுக்கு வருவதோ
அவள் வடித்த கண்ணீர்தான் !!


நடுநிசி ஏக்கம்


என் இனிய தோழிக்கு ஒரு தோழன் எழுதுவது...
இரவு நித்திரையின் போதும்,
நிரம்பிய வயிரின் ஒய்வுபோதும்,
என்னை நான் நினைக்கும்போதும்,
என் மனதின் அடி ஆழத்திலிருந்து ஏதோ ஒன்று
கிடைத்தும் கிடைக்காமல் ,
தொலைந்தும் தொலையாமல் இருப்பதுபோல்
ஓர் உணர்வு !!

சந்தித்த நாட்களும் சரி,
சண்டையிட்ட நாட்களும் சரி...
காத்திருந்த நாட்களும் சரி,
பேசிய நாட்களும் சரி...
ஒவ்வொரு கணமும் திருவிழா நாட்களாய்
என் மனதில்!!

வெறும் நட்பு என்றும் சொல்ல இயலாமல் ,
அன்பே என்றும் அழைக்க இயலாமல் ,
மீண்டும் உன் உறவுக்காக காத்திருக்கிறேன்
அந்த திருவிழாக்காக !!

கானல் பிரிவு

கவிதை எழுத நினைக்கின்றேன்
ஆனால் என்னால் முடியவில்லை...
உன் முகம்  தோன்றும் அளவிற்கு
வார்த்தைகள் என்னுள் தோன்றவில்லை...
ஒவ்வொரு நாளும், நீ
என்னோடு பேசுவாய் என்றெண்ணி
இன்று கானல் கனவோடு நிற்கிறேன்...!!
அடி, நீ என்னுள் இட்டது
அமுதமும் அல்ல,
விஷமும் அல்ல,
பனிக்கட்டி கத்தி...
களித்த இடங்களை எல்லாம்
குளிர்ந்த மனதோடு பார்த்துக்கொண்டே
நான் உறைந்து சாகிறேன் !
உன்னை கேட்பது
பழைய உறவும் அல்ல -
அது உனக்கு கஷ்டம் என்று தெரியும்,
இறந்ததை புதுப்பிக்கவும் அல்ல -
அதில் உனக்கு இஷ்டம் இல்லை என்றும் தெரியும்,
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
தூக்கு தண்டனை கைதிக்கும் இறுதி ஆசை உண்டு;
உன்னை நான் தடுக்கவில்லை
உன் பிரிவின் காரணம்  சொல்;
அது ஒன்றே போதும் - என்
மனதை நான் பக்குவபடுத்திக்கொள்ள...!!
இன்னும் பல சொல்ல ஆசைதான் - தற்போது
உன் எண்ணம் தொட்டவரை
இதுவே வெறும் காகிதம்தான்...
உன் நேரத்தை இனியும் வீணாக்க மாட்டேன்...
நன்றி !!

Tuesday, November 8, 2011

ஹாங்காங் அக்டோபர் 23

ஹாங் காங் -
சீன கடல் தீட்டிய ஓவியமோ...
கடவுள் மோகத்தில் இட்ட காவியமோ!!
கோலப் புள்ளிகளாய் சிறு சிறு தீவுகள்...
அதை இணைக்கும் பாலங்களாய்
மனிதன் அமைத்த சாலைகள்!!
அந்தரங்கத்திலும் விளையாடுவோம்!! - என
கூவிக்கொண்டு மைதானங்களை சுமந்த கட்டிடங்கள்...
கொடுத்து வெய்த்தவை பறவைகள்!! - என
மனதில் சிறு பொறாமையை தூண்டும் அற்புதம்..
பிரமிப்பின் உச்சத்தில் நான்....
நெடுங்காலமாய் மறைத்திருந்த என் தமிழை
மீண்டும் உயிரோடு தீண்டிய அழகு காமினி - ஹாங்காங் !!
-விக்கி

Tuesday, June 24, 2008

Beneath the confident façade
I struggle deep within my Heart
Human that I am
The mind craves
May be....
A hand to hold
A shoulder to lie
A friend to embrace
Eyes to cry....
Still no one around
And no one to confide.....
I stay here
With a cry so mute inside
With thoughts so void
Talking to my mind...
Lonely...forever lonely
Eyes longing for someone to confide...

Tuesday, April 22, 2008

நெஞ்சே என் நெஞ்சே என்னென்று புரியா வதைப்பது ஏனோ
கண்ணே என் கண்ணே காதலின் ஏக்கம் காதலனுள்ளே

அடி குளுகுளு அறையில் முள்ளின் படுக்கையில்
படுக்க சொல்கிறாய் நீயே

என் உடலும் உறைந்து இரத்தமும் கசிந்து
படுத்து சிரிக்கிறேன் நானே

உயிரை கட்டி கூண்டில் அடைத்து சொல்லில் பூட்டினாய் நீயே
பூட்டிய கதவும் திறக்குமென்றேஉன் சொல்லுக்கு விழித்தேன் நானே

இமைகள் மூடிட விழிகள் இருண்டிட நினைவு உதிப்பது உண்மை
விழிகள் விழித்ததும் இருள்கள் கிழிந்ததும் பேச துடித்திடும் இதயம்
கண்ணன் நான் உனை இங்கு பார்க்கவே இதயம் திறந்தேன் பெண்ணே

உனக்கொரு மாளிகை வெளியில் கட்ட பலரும் புகுவர் என்றே
உனக்கும் கட்டினேன் காதல் மாளிகை எந்தன் நெஞ்சுக்குள்ளே
கட்டிய மாளிகை தூணில் அல்ல எந்தன் நரம்பில்தானே

எந்தன் நெஞ்சம் நீயும் உறங்க மெத்தையும் குத்துமேன்றே
எந்தன் சதையை நானும் கிழித்து மெத்தை அமைத்தேன் கண்ணே

உயிருடன் நான் கலந்துவிட்டேன்

உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்


காதல் என்னும் அலைகடலில்
நேசம் என்னும் சுக குழியில்
நானும் மூழ்கி படுத்திருக்க
ஒற்றை கயிறாய்
நீயும் உந்தன்
கையை கொடுத்து வெல்வாய்

உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்

ஆகாயத்தில் நான் மிதக்க
ஆசை கொடிகள் படர்ந்திருக்க
மோகங்கள் எனை சுற்றிவர
உயிருடன் நீயும் நேசம் கொண்டு
என்னை இன்று வெல்வாய்

My 3rd lyrics

தேவதையே தேவதையே
என் முன்னே வந்தாயே வந்தாயே

பௌர்ணமியே பௌர்ணமியே
நீ இன்று தேயாதே தேயாதே

காதலியே காதலியே
நீ என்னை காதலியே காதலியே

நினைவோடு நினைவாகி
எந்தன் உயிரோடு கலந்தாயே

காலங்கள் கண்ணோடு
உயிர் தாளங்கள் நெஞ்சோடு

பாதைகள் உன்னோடு
என் காதல் உன் கண்ணோடு

கீதங்கள் இசையோடு
என் தேகங்கள் உன்னோடு
காத்திருந்தேன் உனக்காக
உயிர் துடித்திருக்கும் மனதோடு

அடி சகியே சுகம் தரும் தீவே
நிலவே நினைவின் உயிரே வா வா !!

My 2nd lyrics

ஏதேதோ ! ஏதேதோ !
நெஞ்சில் கண்டேன்
இதயம் திறந்தேன்
உலா சென்றேன்

ஒரு தென்றல்
புயலாய் வருமோ
நெஞ்சை அல்லுமோ
காதல் சொல்லுமோ !


கள்ளி வந்தாலே
அள்ளி சென்றாலே
என்னை கொண்டாலே

அவள்தானா என் தேவதை
அவள்தானா என் தேவதை

மறந்து நின்றேன் என்னை இழந்தேன்
காதல் கொண்டேன் நெஞ்சே நெஞ்சே
நான் கண்டேன் வெல்வேன் வெல்வேன்


ஹே ஹேய் எஅய் எஅய் ! என் அன்பே !!
என் செய்வேன் என் நெஞ்சே !!

My first song (2000)

எங்கே என் அன்பே
என் சுவாச காற்றே
என் ஜீவன் நீயே
என் அன்பே !!

நான் உடலோடு பிறந்தேன்
உன்னோடு வாழ்வேன்
என் உயிரும் நீயே
என் அன்பே !!

வெறும் வாழ்வென வெறுத்திருந்தேன்
ஒரு காட்சியில் புது தீர்தமிட்டாய்
என் காதலை உரைத்துவிட்டேன்
உன் பாதையில் காத்திருப்பேன்
இரவுக்கு வெளிச்சம் தந்துவிடு
உன் உயிரையும் எனக்குள் பாயத்துவிடு - உயிரே !!

உன் வருகையில் என் உயிர் இருக்கும்
அது தவறினால் என் உடல் இருக்கும்
உனை விழிகள் தேடி திரிகிறதே
என் இரவெல்லாம் இன்று விடிகிறதே
ஒரு வார்த்தையை எனக்கு கொடுத்துவிடு
அடி காதல் வலையில் மீட்டிவிடு - உயிரே !!
அந்தி மாலை பொழுதும்
மோகங்கள் கொள்ள
மொட்டுக்கள் மெல்ல
தேன் சிந்தி மலரும்...

வரும் பாதை பார்த்தே
காலங்கள் கடத்த
கிடைக்கின்ற இன்பம்
சுகமானது...

நாள்தோறும் அவளை
மனதோடு நினைத்து
செய்கின்ற சரசம்
இனிதானது...

காத்திருக்கும் கண்கள்
தீர்த்தங்கள் தரவே
இன்பங்கள் பொங்க
வந்தாயே மானே !

பார்வைகள் மோத
கீதங்கள் இசைக்க
அலைபாயும் உள்ளம்
உன்னோடுதான் !!

சின்னஞ்சிறு சிரிப்பும்
பூத்துவிடு கண்ணே
அதற்காக தானே
ஏங்கினேன் நானே...

மறைவில் எனை பார்த்து
நகைக்கிறேன் கண்ணே
அதுபோதும் பெண்ணே
என் ஜீவன் நனையும்...

காதலர்கள் நெஞ்சம்
சிறகடித்து பறக்க
பிரிக்கின்ற காலம்
மாறாதது...

பிரிவொன்று நேர
இதயங்கள் துடிக்கும்
ஆனாலும் நேசங்கள்
முடியாதது...

காதல் எனும் சுவாசம்
செய்யுமே வாசம்
உந்தன் நினைவாலே
வாழ்வேன் நானே
என் காதல் உன்னோடுதான் !!

My 11th std poem (1998)

The Spread of the Sky with Clouds may change
The Elevation of the Sea with Waves may change
The Epics denoting the Periods may change
The philosophical Ethics denoting the Religions may change
But, My Sweet Heart
The love for you of this
Ever changing heart will never change
.