வருடம்: 2009
அமர்ந்து கொண்டிருக்கிறேன் நான்... ஒரு விமானத்தில் -
நயாகராவில் இருந்து சிகாகோ விற்கு புறப்படும் விமானத்தில்.... நேரம் இரவு ௭:௩0 (7:30) மணி .
அருகில் உள்ள மக்கள் பலரும் தங்களது இருக்கையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்து புரட்டிக்கொண்டு இருக்கின்றனர். சிலர், "இன்றும் என் அருகில் கிழவிதான் அமர வேண்டுமா :-( " என்று மனதுக்குள் புலம்பியபடி சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான், முதன் முதலாய் ஓர் நோட் புக்கில் பென்சிலில் கிருக்கியபடி எழுதி கொண்டிருக்கிறேன். விமான ஓட்டுனர் பாதுகாப்பு அறிவுரைகளை கூறி கொண்டிருக்கிறார். அதை ஏனோ தானோ என காதில் கேட்டபடி மனதில் தோன்றியவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்...
அட, ஏதோ உந்துவதுபோல் தோன்றுகிறதே? ம்ம்ம்... விமானம் நகர ஆரம்பித்துவிட்டது. என் வலதுபுறம் உள்ள ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தேன் ; விமான இறகுகள் தென்பட்டன. ஓ!! இன்றும் இந்த விமான இறகுகளின் அசைவுகளை விமான பயணத்தின்போது காண முடியும் என எண்ணினேன்... இந்த விமானத்தில் இருக்கைகள் இருபுறம் உள்ளன. ஒவ்வொரு புறத்திலும் மூன்று இருக்கைகள். இவ்வாறு இருபத்தி ஒரு வரிசைகள் உள்ளன. நான் வலது புறத்தில் உள்ள பதினெட்டாம் வரிசையில் அமர்ந்துள்ள ஒரு இந்திய வாலிபனுக்கு இடையேயும் ஒரு ஐம்பது வயது அமெரிக்க மூதாட்டிக்கு இடையேயும் அமர்ந்துகொண்டிருகிறேன்.
விமானம் பறக்க ஆரம்பித்துவிட்டது... அது பூமியின் ஈரப்பு சக்தியை எதிர்த்துக்கொண்டு காற்றை கிழித்துக்கொண்டு மேலேறுகிறது. ஏதோ ஒரு தடுப்புச்சக்தியை எதிர்த்து தள்ளிக்கொண்டு போவதைபோல் உணர்வோம். காற்றழுத்தம் நம் காதுகளை அடைத்துக்கொள்ளும். சற்றே திரும்பி பாத்தேன்... எனது இடது பக்கம் அமர்ந்துள்ள இந்திய இளைஞன் மற்றும் எனது வலப்பக்கம் அமர்ந்துள்ள அமெரிக்க மூதாட்டி இருவரும் தம் கண்களின் சோம்பல் சாய்கின்றனர். அப்படியே எனது வலப்பக்கம் உள்ள சன்னலை எட்டிப்பார்த்தேன். அற்புதமான காட்சி !! அமெரிக்க மற்றும் அதன் உறவு நாடான கனடாவை கிழிக்கின்ற வெள்ளதைபோல் ஓடுகின்ற நயாகரா நதியை நாம் காணலாம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலங்கள் நமது நெஞ்செலும்புகளை போல் காணப்ப்படும். இதை பார்த்துக்கொண்டு இருக்கையில், என் உதட்டோரம் சிறு சிரிப்பு பூப்பதை நான் உணர்ந்தேன். ஆம், நான் இப்பொழுது தொலைவில் இருந்து பார்க்கும் காட்சியைத்தான் நேற்று அருகில் சென்று பார்த்தேன்.
நியாகரா வீழ்ச்சியை பலர் பாராட்டி கேட்டிருக்கிறேன் ; இருந்தும், நேற்று அந்த வீழ்ச்சியை நேரில் சென்று கண்டபொழுதுதான் தெரிந்தது அதன் பிரம்மிப்பு !! சுமார் இருநூற்று ஐம்பது அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த ராட்சச வீழ்ச்சி. இதில் உள்ள ஒவ்வொரு துளியும் சுமார் இருபத்திரண்டு மைல்/கிமீ வேகத்தில் விழுகிறதாம். அதை, அந்த வீழ்ச்சியின் முரசு சத்ததின்னின்றும், அது கிளப்புகின்ற புகையிலிருந்தும் நாம் அறியலாம். இதன் அகலமும், நெடுமையும் ஏதோ ஒரு பகுதி வானத்தை தனக்குள் ஏந்தியதுபோல் காட்சி அளிக்கும். முதலில் இரண்டு அடி உயரத்தில் பிறக்கும் இந்த நதிநீர் தனது மிகுதியால் பாறைகள் மீது மோதிக்கொண்டு, சலசல என்ற ஆரவாரத்துடன் இருநூற்று ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. இந்த வீழ்ச்சி, தான் விழும் வேகத்தில் தன் துளிகளை சுமார் ஐந்நூறு அடி தொலைவிற்கு சிதறடிக்கும்.
இங்கு செல்லும் அனைவரும் பார்க்கவேண்டியது இரண்டு- "மைடு ஒப் த மிஸ்ட்" - மற்றும் "கவே ஒப் த விண்ட்ஸ்". மிட் ஒப் த மிஸ்ட் என அழைக்கப்படுவதில் மக்களை அருவிக்கு அருகே கப்பலில் அழைத்துச்செல்வார்கள். நாம் கப்பலின் கூரையிட்ட கீழ்த்தலத்திலோ அல்லது திறந்துகிடக்கும் மேல் தளத்திலோ சென்று நின்று கொள்ளலாம். இந்த இயற்கை அழகின் காட்சியில் நனைத்துகொண்டது போதாது, அதன் நீர் தெரிப்பிலும் தம்மை நனைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கப்பலின் மேல்தலத்திற்கே செல்வார்கள். நானும் அப்படித்தான்...
கப்பலின் என்ஜின் தனது பயணத்தை டுபுடுபு என ஆரம்பித்ததில் இருந்து, இந்த இயற்க்கை காட்சியின் பிரம்மாண்ட அழகில் தொலைந்துபோனேன் நான். என்னை போலவே அந்த கப்பலில் பயணித்த அனைவரும், தங்கள் முகத்தில் சிரிப்பு பூக்க தன்னை மறந்து நெஞ்சம் மகிழ்ந்தனர்.
அமெரிக்க மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவே இந்த நயகரா நதி அமைந்துள்ளதால், இரு நாடுகளினின்றும் சுற்றுல கப்பல்கள் மக்களை ஏந்திய வண்ணம் புறப்படும். இதில் பயணிக்கும் அனைவருக்கும் கப்பலில் ஒரு பிளாஸ்டிக் ஆடையை கொடுப்பார்கள். இது தெறிக்கின்ற நீரில் நனையாமல் இருப்பதற்காக அணிந்துக்கொள்ளலாம். இந்த கப்பலில் செல்லும் போது மொத்தம் நான்கு அருவிகளை காணலாம். அமெரிக்க நிலத்திலிருந்து உருவாகும் இரண்டு அருவிகள், கனடா நிலத்திலிருந்து விழும் ஒரு அருவி மற்றும், இரு நாடுகளையும் தன்னுள் இழுத்துக்கொண்டு சரிவதுபோல் விழுங்கின்ற ராட்சச அருவி.
நான் சென்றது அமெரிக்க கப்பல் சவாரியில்... என்னோடு பணிபுரியும் அம்பிலி, அமித், அனூப் மற்றும் அவரது மனைவியும் என்னுடன் பயணித்தனர். அந்த கப்பலில் இருந்த அனைவரும் தனது கண்களில் சந்தோசத்தோடும், மனதில் வியப்பு கலந்த பயத்தோடும் போட்டிபோட்டுக்கொண்டு புகைப்படங்களை எடுத்துகொண்டனர்.
நீர் வீழ்ச்சியால் எகிரித்தெரிக்கின்ற நீர்துளி அலைகளை சிறிதும் பொறுப்படுத்தாமல், ஏதோ வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று கிடைத்ததுபோல், அனைவரும் அந்த ராட்சச நீர்வீழ்ச்சியின் முன் நிற்பதுபோல் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் நாங்கள் ஐவரும் அடங்குவோம்.
நாங்கள் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சொன்ன ஒரு செய்தி - இந்த அருவி தன்னை தாங்கும் பாறையை ஒரு வருடத்திற்கு சுமார் நான்கு அடி தூரத்திற்கு அரிக்கிரதாம். இந்த அரிப்பை கட்டுப்படுத்த அமெரிக்க நாடு இதன் ஒரு பகுதி தண்ணீரை வேறு திசைக்கு திருப்பி மின்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இதனால், வருடத்திற்கு நான்கு அடி அரிப்பில் இருந்து ஒரு அடி அரிப்பிற்கு குறைத்துள்ளனர். இருப்பினும் இன்னும் ஐம்பதாயிரம் ஆண்டுகளில் இந்த நீர் வீழ்ச்சி தன்னை சுமக்கின்ற பாரைநிலத்தை அரித்து அரித்து பின்னேறி அதை தரைமட்டம் ஆக்கிவிடும் என்று அந்நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதை, அங்கு நேரில் சென்று நீர்வீழ்ச்சியின் ஓசையில் தனது உடல் அதிர்வை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த உணர்வை உணர்ந்து வியந்தபடியே பிரம்மித்த கண்களோடு நாங்கள் கரைக்கு திரும்பினோம்.
பின்னர் எங்களை அங்கு அழைத்துச்சென்ற சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா பேருந்திற்கு சென்றார். பின்னர் அவர் எங்களக்கு அங்குள்ள ஒவ்வொரு இடத்தையும் விலக்கியபடியே பேருந்தில் வட்டமிட்டார்.
(தொடர்ச்சி துலைந்தது... 😊)
படித்ததற்கு நன்றி....
No comments:
Post a Comment