Tuesday, April 22, 2008

அந்தி மாலை பொழுதும்
மோகங்கள் கொள்ள
மொட்டுக்கள் மெல்ல
தேன் சிந்தி மலரும்...

வரும் பாதை பார்த்தே
காலங்கள் கடத்த
கிடைக்கின்ற இன்பம்
சுகமானது...

நாள்தோறும் அவளை
மனதோடு நினைத்து
செய்கின்ற சரசம்
இனிதானது...

காத்திருக்கும் கண்கள்
தீர்த்தங்கள் தரவே
இன்பங்கள் பொங்க
வந்தாயே மானே !

பார்வைகள் மோத
கீதங்கள் இசைக்க
அலைபாயும் உள்ளம்
உன்னோடுதான் !!

சின்னஞ்சிறு சிரிப்பும்
பூத்துவிடு கண்ணே
அதற்காக தானே
ஏங்கினேன் நானே...

மறைவில் எனை பார்த்து
நகைக்கிறேன் கண்ணே
அதுபோதும் பெண்ணே
என் ஜீவன் நனையும்...

காதலர்கள் நெஞ்சம்
சிறகடித்து பறக்க
பிரிக்கின்ற காலம்
மாறாதது...

பிரிவொன்று நேர
இதயங்கள் துடிக்கும்
ஆனாலும் நேசங்கள்
முடியாதது...

காதல் எனும் சுவாசம்
செய்யுமே வாசம்
உந்தன் நினைவாலே
வாழ்வேன் நானே
என் காதல் உன்னோடுதான் !!

No comments: