திருவிழாக்காக...
~~~~~~~~~~~~~~
இரவு நித்திரையின் போதும்,
நிரம்பிய வயிரின் ஓய்வுபோதும்,
என்னை நான் நினைக்கும்போதும்
என் மனதின் அடி ஆழத்திலிருந்து -ஏதோ
ஒன்று கிடைத்தும் கிடைக்காமல்,
தொலைந்தும் தொலையாமல் இருப்பதுபோல்
ஓர் உணர்வு!
சந்தித்த நாட்களும் சரி
சண்டையிட்ட நாட்களும் சரி...
காத்திருந்த நாட்களும் சரி
பேசிய நாட்களும் சரி...
ஒவ்வொரு கணமும் திருவிழா நாட்களாய்
இன்று என் மனதில்!
வெறும் நட்பு என்றும் சொல்ல இயலாமல்
அன்பே என்று அழைக்கவும் இயலாமல்
மீண்டும் உன் உறவுக்கு காத்திருக்கிறேன்
அந்த திருவிழாக்காக!!
-D.V.B-
No comments:
Post a Comment